ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி சந்திப்பு

தினமலர்  தினமலர்
ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு உறவு குறித்தும், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இருவரது சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சகம், 'பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் கோவிட் சூழலில், பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்தும், வர்த்தகம், பாதுகாப்பில், இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தனர்' என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'மோடி - மோரிசன் பேச்சுவார்த்தையில், இந்திய - ஆஸ்திரேலிய உறவு குறித்தும், இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் மக்கள் தொடர்பு குறித்தும் விவாதித்தனர்' என பதிவிட்டுள்ளது.

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி,

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை