ருதுராஜ் அரைசதம்: சென்னை அணி கலக்கல் வெற்றி

தினமலர்  தினமலர்
ருதுராஜ் அரைசதம்: சென்னை அணி கலக்கல் வெற்றி

துபாய்: மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ருதுராஜ் அரை சதம் விளாச, சென்னை அணி20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசன் கொரோனா பரவல் காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கின்றன. துபாயில் நடந்த லீக் போட்டியில் சென்னை, 'நடப்பு சாம்பியன்' மும்பை அணிகள் மோதின.ரோகித் ஓய்வு: மும்பை அணியில் ரெகுலர் கேப்டன் ரோகித் சர்மா, 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யாவுக்கு உடற்தகுதி காரணமாக ஓய்வு வழங்கப்பட்டது. போலார்டு அணியை வழிநடத்தினார். அன்மோல்பிரீத் சிங் அறிமுக வாய்ப்பு பெற்றார். 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.
ரெய்னா ஏமாற்றம்: சென்னை அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. டுபிளசி, மொயீன் அலி 'டக்-அவுட்' ஆகினர். மில்னே வீசிய பந்து தாக்கியதில் இடது முழங்கையில் காயமடைந்த அம்பதி ராயுடு (0*) 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் 'பெவிலியன்' திரும்பினார். அடுத்து வந்த ரெய்னா (4), கேப்டன் தோனி (3) ஏமாற்றினர்.



ருதுராஜ் அபாரம்:



பின் இணைந்த ருதுராஜ், ரவிந்திர ஜடேஜா ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. போலார்டு பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ருதுராஜ், அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய இவர், பும்ரா பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்த போது பும்ரா பந்தில் ஜடேஜா (26) அவுட்டானார். பவுல்ட் வீசிய 19வது ஓவரில் 2 சிக்சர் விளாசிய டுவைன் பிராவோ (23) ஓரளவு கைகொடுத்தார். சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன் எடுத்தது. ருதுராஜ் (88 ரன், 4 சிக்சர், 9 பவுண்டரி), ஷர்துல் தாகூர் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.மும்பை சார்பில் பவுல்ட், மில்னே, பும்ரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

சவுரப் ஆறுதல்:


சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு குயின்டன் டி காக் (17), அன்மோல்பிரீத் சிங் (16) சுமாரான துவக்கம் தந்தனர். சூர்யகுமார் யாதவ் (3), இஷான் கிஷான் (11) நிலைக்கவில்லை. கேப்டன் போலார்டு (15), குர்னால் பாண்ட்யா (4) அணியை கைவிட்டனர். டுவைன் பிராவோ 'வேகத்தில்' ஆடம் மில்னே (15), ராகுல் சகார் (0) வெளியேறினர். பொறுப்பாக ஆடிய சவுரப் திவாரி அரைசதமடித்தார்.மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 136 ரன் மட்டும் எடுத்து, 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சவுரப் திவாரி (50), பும்ரா (1) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை சார்பில் பிராவோ 3, தீபக் சகார் 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை ருதுராஜ் வென்றார்.

துபாய்: மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ருதுராஜ் அரை சதம் விளாச, சென்னை அணி20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.nsimg2848525nsimgஇந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசன் கொரோனா பரவல்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை