அமெரிக்க எம்.பி.,க்கள் பேச்சு; பாக்., பிரதமர் இம்ரான் வேதனை

தினமலர்  தினமலர்
அமெரிக்க எம்.பி.,க்கள் பேச்சு; பாக்., பிரதமர் இம்ரான் வேதனை

இஸ்லாமாபாத்-“ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்ததற்கு பாகிஸ்தான் மிகப்பெரும் விலை கொடுத்துள்ளது.''ஆனால் தலிபான்களுக்கு ஆதரவாக இருந்ததாக அமெரிக்க எம்.பி.,க்கள் பேசியிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது,” என, பாக்., பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

நம் அண்டை நாடான பாக்., பிரதமர் இம்ரான் கான், 'ரஷ்யா டுடே' என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டி:அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த நேரத்தில் பாகிஸ்தான் மிகவும் பதற்றமான சூழ்நிலையில் இருந்தது. அந்த காலகட்டத்தில்தான் முஷாரப் ராணுவ புரட்சி வாயிலாக ஆட்சியை கைப்பற்றினார். முஷாரப் பாக்.,கில் தன் ஆட்சியை நடத்த அமெரிக்காவின் உதவியை நாடினார். அது தான் மிகப்பெரிய தவறு.மேலும் ரஷ்யாவுக்கு எதிராக முஜாஹிதீன்களை அமெரிக்கா வளர்த்தது. அந்த நேரத்தில் பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்தது

ஆப்கானிஸ்தானில் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக தலிபான்கள் போராடுவதற்கு அமெரிக்காவின் விருப்பப்படிதான் தலிபான்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக பாகிஸ்தான் மிகப் பெரும் விலை கொடுத்துள்ளது. ஆனால் அமெரிக்க எம்.பி.,க்கள் பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்ததாக பேசியிருப்பது மிகுந்த வேதனை ஏற்படுத்தியுள்ளது. எங்களை குறை கூறுவது நியாயமற்றது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்

இஸ்லாமாபாத்-“ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்ததற்கு பாகிஸ்தான் மிகப்பெரும் விலை கொடுத்துள்ளது.''ஆனால் தலிபான்களுக்கு ஆதரவாக இருந்ததாக அமெரிக்க

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை