ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய அணிக்கு 3-வது வெற்றி

தினகரன்  தினகரன்
ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய அணிக்கு 3வது வெற்றி

டோக்கியோ: ஜப்பானின் சிபா மற்றும் ஃபுனாபஷியில் ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று (சனி) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 3-0 (25-22, 25-22, 25-23) என்ற செட் கணக்கில் பலம் வாய்ந்த சவுதி அரேபிய அணியை வீழ்த்தி தனது மூன்றாவது வெற்றியை பெற்றது. சவுதிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரா்கள் ஜெரோம் வினித், ராய் அஸ்வால் தலா 15 புள்ளிகளை குவித்து அசத்தினர். சவுதி கேப்டன் அசவ்ஸ் ஆஸாத் 20 புள்ளிகளைப் பெற்றாா். ஏற்கெனவே 9 முதல் 16-ஆவது இடத்துக்கான தரவரிசை ஆட்டங்களில் இந்திய அணி குவைத், உஸ்பெகிஸ்தான் அணிகளை வென்றிருந்தது. முன்னதாக குரூப் பிரிவு ஆட்டங்களில் பஹ்ரைன், கத்தாா், ஜப்பானிடம் தோற்றது இந்தியா. இதனால் காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் 9-வது இடத்தை நிா்ணயிக்கும் ஆட்டத்தில் இன்று பஹ்ரைனுடன் இந்தியா மோதுகிறது. சா்வதேச வாலிபால் தரவரிசையில் இந்திய அணி 71-வது இடத்தில் உள்ளது. கடந்த 2005 ஆசிய வாலிபால் போட்டியில் இந்தியா 4-வது இடத்தைப் பெற்றிருந்தது சிறப்பான சாதனையாக உள்ளது. 2019ம் ஆண்டு போட்டியில் இந்தியா 8-ம் இடத்தைப் பெற்றது.

மூலக்கதை