இந்தியாவுக்கு இரண்டு ‘பயிற்சி’ * உலக ‘டுவென்டி–20’ தொடருக்கு தயாராக | செப்டம்பர் 18, 2021

தினமலர்  தினமலர்
இந்தியாவுக்கு இரண்டு ‘பயிற்சி’ * உலக ‘டுவென்டி–20’ தொடருக்கு தயாராக | செப்டம்பர் 18, 2021

 துபாய்: ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி இரு பயிற்சி போட்டிகளில் பங்கேற்கிறது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் எமிரேட்சில் வரும் அக். 17–நவ. 14ல் நடக்கவுள்ளது. முதலில் தகுதிச்சுற்று போட்டிகள் அக். 17ல் ஓமனில் துவங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட 8 அணிகள் நேரடியாக ‘சூப்பர் 12’ சுற்றில் பங்கேற்கின்றன. 

இதில் இந்திய அணி ‘குரூப் 2’ ல் நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. அக். 24ல் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் அக். 18, 20 ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக பயிற்சி போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு போட்டிகளும் ஸ்டார் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 

மூலக்கதை