இந்திய பெண்கள் தோல்வி * பூஜா அரைசதம் வீண் | செப்டம்பர் 18, 2021

தினமலர்  தினமலர்
இந்திய பெண்கள் தோல்வி * பூஜா அரைசதம் வீண் | செப்டம்பர் 18, 2021

கான்பரா: பயிற்சி போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வியடைந்தது. 

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி செப். 21 முதல் மூன்று ஒருநாள், ஒரு பகலிரவு டெஸ்ட் (செப். 30–3, கான்பரா), மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் இரு அணிகளும் நேற்று பயிற்சி போட்டியில் மோதின. 

ஆஸ்திரேலிய அணிக்கு ஹெய்ன்ஸ் (65), கேப்டன் மெக் லான்னிங் (59), பெத் மூனே (59) என மூவரும் அரைசதம் அடித்து கைகொடுத்தனர். 50 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் பூணம் யாதவ் 3 விக்கெட் சாய்த்தார்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஷபாலி 27 ரன் எடுக்க, ஸ்மிருதி மந்தனா 14, மிதாலி ராஜ் 1 ரன் எடுத்தனர். ஒரு கட்டத்தில் 106 ரன்/6 விக்கெட் என திணறியது இந்தியா. பிறகு பூஜா (57) அரைசதம் அடிக்க, யஸ்திகா (41), தீப்தி சர்மா (49) சற்று உதவினர். இருப்பினும் இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 242 ரன்கள் மட்டும் எடுத்து 36 ரன்னில் தோற்றது. 

மூலக்கதை