மூணாறில் போக்குவரத்து தடை ஏற்படுத்திய 'படையப்பா'

தினமலர்  தினமலர்
மூணாறில் போக்குவரத்து தடை ஏற்படுத்திய படையப்பா

மூணாறு--கேரளா மூணாறு --உடுமலைப்பேட்டை ரோட்டில் கன்னிமலை எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆண் காட்டு யானை படையப்பா அரை மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்படுத்தியும் பயணிகள் சந்தோசத்தில்பொறுமை காத்தனர்.

மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் அனைவராலும் படையப்பா என அழைக்கப்படும் வயது முதிர்ந்த ஆண் காட்டு யானைமிகவும் பிரபலம். அந்த யானை இரை தேடி ரோட்டோரக் கடைகளை குறி வைத்து வலம் வரும் என்பதால்அதனை தேடி சுற்றுலாப்பயணிகள் தினமும் வருவர். குறிப்பாக மூணாறு-- உடுமலைப்பேட்டை ரோட்டில் படையப்பாவை காணலாம்.அந்த வழித்தடத்தில் கன்னிமலை எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ரோட்டில் வலம் வந்த யானையை இருட்டில் தெரியாமல் வாகனங்களில் பயணித்த ஏராளமானோர் அருகில் சென்ற பிறகே பார்த்தனர்.இரை தேடிய படையப்பா வாகனங்கள் சென்றதை பெரிதுபடுத்தவில்லை. இருப்பினும் அரை மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்படுத்தியும் படையப்பாவை பார்த்த சந்தோசத்தில் பயணிகள் பொறுமை காத்தனர்.---------

மூணாறு--கேரளா மூணாறு --உடுமலைப்பேட்டை ரோட்டில் கன்னிமலை எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆண் காட்டு யானை படையப்பா அரை மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்படுத்தியும் பயணிகள்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை