கர்ம பூஜையில் பரிதாபம் ஆற்றில் மூழ்கி 7 சிறுமிகள் பலி

தினகரன்  தினகரன்
கர்ம பூஜையில் பரிதாபம் ஆற்றில் மூழ்கி 7 சிறுமிகள் பலி

லத்தேகர்: ஜார்க்கண்ட் மாநில பழங்குடியினரின் மிக முக்கிய திருவிழாக்களில் கர்ம பூஜையும் ஒன்று. இந்த பூஜையின்போது முளைப்பாரி எடுத்து சென்று ஆற்றில் விடுவது வழக்கம். இந்தாண்டுக்கான கர்ம பூஜை நேற்று நடந்தது. அப்போது, லத்தேகர் மாவட்டம், ஷரெகடாவில் உள்ள பக்ரூ கிராமத்தில், முளைப்பாரியை ஆற்றில் விடுவதற்காக 12 முதல் 20 வயதுக்குட்பட்ட 7 சிறுமிகள் ஆற்றில் இறங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சிறுமி ஆற்றில் மூழ்கியதும் அவரை காப்பாற்றும் முயற்சியில் அடுத்தடுத்தது சிறுமிகள் ஆற்றில் இறங்கினர். இதில் 7 சிறுமிகளும் மூழ்கி உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் அவரது டிவிட்டரில், `7 சிறுமிகள் ஆற்றில் மூழ்கி பலியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சிறுமிகளுக்கு இறைவன் சாந்தி அளிக்கவும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தாங்கும் சக்தியை வழங்கவும் பிரார்த்திக்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை