இந்தியாவில் குழந்தை திருமணம் 50% உயர்வு: தேசிய குற்ற புள்ளி விபரத்தில் அதிர்ச்சி

தினகரன்  தினகரன்
இந்தியாவில் குழந்தை திருமணம் 50% உயர்வு: தேசிய குற்ற புள்ளி விபரத்தில் அதிர்ச்சி

புதுடெல்லி: இந்தியாவில் கடந்தாண்டில் குழந்தை திருமண குற்றங்கள் 50 சதவீதம் அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கை வருமாறு:*  குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்தாண்டில் 785 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.*  அதிகபட்சமாக கர்நாடகாவில் 184 குழந்தை திருமண குற்றங்கள் பதிவாகி உள்ளன.*  அசாம், மேற்கு வங்கத்தில் 2வது மற்றும் 3வது இடத்தில் முறையே 138, 98 குழந்தை திருமண வழக்குகிள் பதிவாகி உள்ளது.*  4வது இடமாக தமிழ்நாட்டில் 77, 5வது இடத்தில் தெலங்கானாவில் 62 வழக்குகளும் பதிவானது.*  முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்தாண்டில் குழந்தை திருமண குற்றங்கள் 50 சதவீத அதிகரித்துள்ளது.* கடந்த 2019ம் ஆண்டில் 523, 2018ம் ஆண்டில் 501, 2017ம் ஆண்டில் 395, 2016ம் ஆண்டில் 326, 2015ம் ஆண்டு 293 வழக்குகள் பதிவாகி உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.1714 ஆட்கடத்தல் வழக்குதேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் மேலும், ‘பாலியல் தொழில், குழந்தை தொழிலாளர், வீட்டு வேலைக்கு என பல்வேறு மாநிலங்களில் இருந்து 1,714 ஆட்கள் கடத்தப்பட்டு உள்ளனர். அதிகப்பட்சமாக மகாராஷ்டிரா, தெலங்கானாவில் தலா 184, ஆந்திரா 171, கேரளா 166, ஜார்க்கண்ட் 140, ராஜஸ்தானில் 128 பேர் கடத்தப்பட்டுள்ளனர். இதில், 10.6 சதவீத குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை