டெவலப்மென்ட் அதிகாரிகளுக்காக எல்ஐசி.யின் `பிரகதி’ மொபைல் செயலி அறிமுகம்

தினகரன்  தினகரன்
டெவலப்மென்ட் அதிகாரிகளுக்காக எல்ஐசி.யின் `பிரகதி’ மொபைல் செயலி அறிமுகம்

புதுடெல்லி: எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எல்ஐசி நிறுவனத்தில் வளர்ச்சி அதிகாரிகளாக (டெவலப்மென்ட் ஆபிசர்ஸ்) செயல்படுபவர்கள் தங்களது குழு முகவர்கள் மொபைல் செயலியை எப்படி பயன்படுத்துகின்றனர், குழுவின் அன்றாட நடவடிக்கை என்ன என்பதை கண்காணிப்பதுடன், பிரீமியம் வசூலித்தல், முகவர்களின் செயல்பாடு, வருங்கால என்டிஆர்டி, செஞ்சுரியன் முகவர்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிய வசதியாக பிரகதி  (Performance Review Application Growth and Trend Indicator) செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் விரிவடைந்து வரும் கால கட்டத்தில், வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை சிறந்த முறையில் சேகரிப்பது அதிகாரிகள் தங்களது கடமையை சரி வர செய்வதற்கு அவசியமாகிறது. அதிலும், குறிப்பாக ஒரு நிறுவனத்தின் மார்க்கெட்டிங் உத்திகளை மேம்படுத்தும் திட்டமிடலுக்கும் முடிவுகள் எடுப்பதற்கும் இந்த விவரங்கள், தகவல்கள் மிகவும் முக்கியமானது. எல்ஐசி முகவர்கள் காகிதம் இல்லாமல் மின்னணு முறையில் வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பெற்று சமர்ப்பிக்கும் வகையில், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட `ஆனந்தா’ என்ற மொபைல் செயலிக்கு முகவர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  இந்த பிரகதி செயலியை எல்ஐசி இந்தியா தலைவர் எம்.ஆர்.குமார் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குநர்கள் முகேஷ் குப்தா, ராஜ்குமார், சித்தார்த்த மொகந்தி, மினி இபே மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை