அடுத்தாண்டுக்குள் 900 கிமீ மெட்ரோ ரயில் பாதை : அமைச்சர் ஹர்தீப் தகவல்

தினகரன்  தினகரன்
அடுத்தாண்டுக்குள் 900 கிமீ மெட்ரோ ரயில் பாதை : அமைச்சர் ஹர்தீப் தகவல்

புதுடெல்லி: டெல்லி மெட்ரோ ரயிலின் நஜாப்கர்க்-தான்சா பேருந்து நிலைய வழித்தட நிலையத்தின் விரிவாக்க நிகழ்ச்சியில் காணொலி மூலமாக ஹர்தீப் சிங் பூரி நேற்று பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ``தற்போது நாடு முழுவதும் ஏறக்குறைய 740 கிமீ தூர மெட்ரோ ரயில்பாதை பயன்பாட்டில் உள்ளது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு வரும் 2022ம் ஆண்டில் 900 கிமீ தூரமாக அதிகரிக்கப்படும். நாட்டின் பல்வேறு நகரங்களில் மேலும் ஆயிரம் கி.மீ. தூரம் மெட்ரோ ரயில்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது’’ என்றார்.

மூலக்கதை