ஆப்கானில் அப்பாவிகள் 10 பேரை தவறுதலாக கொன்று விட்டோம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு

தினகரன்  தினகரன்
ஆப்கானில் அப்பாவிகள் 10 பேரை தவறுதலாக கொன்று விட்டோம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா, நேட்டோ படைகள் வாபஸ் பெற்றதும், அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். ஆனால், அந்நாட்டில் உள்ள அமெரிக்கர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர், தனது படைக்கு உதவியாக இருந்த ஆப்கானிஸ்தான் மக்களை வெளியேற்றுவதற்காக காபூல் விமான நிலையத்தை மட்டும் ஆகஸ்ட் 31ம் தேதி வரையில் அமெரிக்க, நேட்டோ படைகள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. சிறப்பு விமானங்களை இயக்கின. இவற்றின் மூலம் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக ஆயிரக்கணக்கான ஆப்கான் மக்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். இதை விரும்பாத தீவிரவாதிகள், ஆகஸ்்ட் 29ம் தேதி 2 மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இதில், 10க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகினர். மேலும், அமெரிக்க வீரர்கள் 13 பேரும் பலியாகினர். இதனால், அமெரிக்கா ஆத்திரம் அடைந்தது. இந்த தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தியதாக அறிவித்தது. அதோடு, இந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் வாகனத்தில் தப்பிச் செல்லும்போது டிரோன் தாக்குதல் நடத்தி, 10 பேரை கொன்று விட்டதாகவும் அறிவித்தது. இவர்களில் 7 பேர் சிறுவர்கள். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில், அமெரிக்க மத்திய படையின் தளபதி ஜெனரல் பிராங்க் மெக்கனிஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஆப்கானில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல் குறித்து நடத்தப்பட்ட விரிவான விசாரணையில், கொல்லப்பட்ட அனைவரும் ஐஎஸ் தீவிரவாதிகள் அல்ல என தெரிய வந்துள்ளது. அவர்கள் சாதாரண மக்கள். ராணுவத்துக்கு அப்போது கிடைத்த தகவலின்படி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அது, மிகப்பெரிய தவறு. தெரியாமல் நடந்த இந்த தவறுக்கு, படையின் தளபதி என்ற முறையில் மன்னிப்பு கோருகிறேன்,’’ என்றார். மாறி விட முடியுமா? பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித் கூறுகையில், ‘‘அண்டை நாட்டில் பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. தலிபான்கள் இடைக்கால அரசு அமைந்து 17 நாட்கள் மட்டுமே ஆகிறது. இந்த குறுகிய காலத்தில் ‘ஸ்காண்டிநேவியன்’ நாடுகள் போன்ற வளர்ந்து விட முடியாது என்றார்.3 வெடிகுண்டு தாக்குதல் 3 பேர் உடல் சிதறி பலிஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்கார் மாகாணத்தில் நேற்று 2 வெவ்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 3 பேர் உடல் சிதறி பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இந்த தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தி இருக்கக்கூடும் என்ற சந்தேகம் நிலவுகிறது. அதேபோல், தலைநகர் காபூலில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் 2 பேர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.பெண்கள் அமைச்சகம் கலைப்பு உலக வங்கி ஊழியர்கள் ஓட்டம்ஆப்கானில் கடந்த ஆட்சியில் பெண்கள் விவகாரத்துக்காக தனி அமைச்சகம் செயல்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இந்த அலுவலகத்துக்கு வேலைக்கு வந்த பெண் ஊழியர்களை தலிபான்கள் துப்பாக்கி முனையில் விரட்டினர். இந்நிலையில், இந்த அமைச்சகத்தை நேற்று அதிரடியாக கலைத்த அவர்கள், அந்த இடத்தில், ‘மதபோதனை, வழிகாட்டுதல் மற்றும் பரப்புரை’ என்ற புதிய அமைச்சகத்தை ஏற்படுத்தினர்.

மூலக்கதை