'குவாட்' மாநாடு அவசியம்: அரசியல் நிபுணர்கள் கருத்து

தினமலர்  தினமலர்
குவாட் மாநாடு அவசியம்: அரசியல் நிபுணர்கள் கருத்து

வாஷிங்டன்:'இந்தோ - பசிபிக் கடல் பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்துவது உள்ளிட்ட தற்போதைய பிரச்னைகளுக்கு தீர்வு காண 'குவாட்' மாநாட்டை கூட்டுவது அவசியம்' என, அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இந்தோ - பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடிக்க 2017ல், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து 'குவாட்' அமைப்பை உருவாக்கின.இந்நிலையில் அமெரிக்காவில் 24ம் தேதி குவாட் மாநாட்டிற்கு அதிபர் ஜோ பைடன் ஏற்பாடு செய்துள்ளார். இதில் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.இது குறித்து அமெரிக்க - இந்திய ஒத்துழைப்பு கூட்டமைப்பின் தலைவர் முகேஷ் அகி கூறியதாவது:தற்போதைய சூழலில் கொரோனா தடுப்பூசி விநியோகம், பருவ நிலை மாற்றத்தின் பாதிப்பு ஆகிய இரு சவால்களை உலக நாடுகள் எதிர்கொண்டுள்ளன.இந்நிலையில் இந்தோ-பசிபிக் கடல் பிராந்தியத்தில் சரக்கு போக்குவரத்தை வலுப்படுத்தி, வர்த்தகப் பொருளாதாரம் மேம்பாடு காண, குவாட் மாநாடு உதவும்.பிராந்திய அச்சுறுத்தல்களை முறியடித்து இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்திற்கு தேவையான நடவடிக்கைகள் இம்மாநாட்டில் எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.அமெரிக்க அப்சர்வர் ஆய்வு அறக்கட்டளை செயல் இயக்குனர் துருவ ஜெய்சங்கர் பேசியதாவது:இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் ஜனநாயகத்தை காக்க, ஒருமித்த கருத்துள்ள நான்கு நாடுகள் ஒன்றிணைந்துள்ளன.இத்துடன் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு, விநியோகம், பருவநிலை மாற்றம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு, அடிப்படை கட்டமைப்பு நிதியுதவி போன்றவை குவாட் அமைப்புக்கு சவாலாக உள்ளன. அவற்றை சமாளிப்பதற்கான திட்டங்களை நான்கு நாடுகளும் இணைந்து மேற்கொள்ள, இந்த மாநாடு துணை புரியும்.இவ்வாறு அவர் பேசினார்.

வாஷிங்டன்:'இந்தோ - பசிபிக் கடல் பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்துவது உள்ளிட்ட தற்போதைய பிரச்னைகளுக்கு தீர்வு காண 'குவாட்' மாநாட்டை கூட்டுவது அவசியம்' என, அரசியல் நிபுணர்கள்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை