மாவட்டம் முழுதும் இன்று சிறப்பு முகாம்: தடுப்பூசியே பேராயுதம்! விடுபட்டோர் பயன்படுத்தி கொள்ள அழைப்பு:

தினமலர்  தினமலர்
மாவட்டம் முழுதும் இன்று சிறப்பு முகாம்: தடுப்பூசியே பேராயுதம்! விடுபட்டோர் பயன்படுத்தி கொள்ள அழைப்பு:

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில், இன்று இரண்டாம் கட்ட தடுப்பூசி சிறப்பு முகாம், நடக்கிறது. முகாமில், 76 ஆயிரத்து, 821 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், அரசு பள்ளிகள், சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஊட்டச்சத்து மையங்கள், என, 672 மையங்களில், கொரோனா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது.காலை, 7:00 முதல், மாலை, 7:00 மணி வரை, தடுப்பூசி முகாம் நடக்கும். முகாமில், பல்வேறு துறைகளை சேர்ந்த, 2,688 அரசு பணியாளரும், 1,200க்கும் அதிகமான தன்னார்வலர்களும் பங்கேற்க உள்ளனர்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இன்று நடைபெறும் தடுப்பூசி முகாம் குறித்து பகுதிவாரியாக மைக் செட் மூலமும், துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இன்றைய முகாமில் 49 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

அனைத்து மையங்களிலும் முகாம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளும் மாநகராட்சி அலுவலர்கள் மேற்கொண்டனர்.திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரேயுள்ள தெற்கு தொகுதி எம்.எல்,ஏ., அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்மையத்தில் தடுப்பூசி முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியன் பார்வையிடவுள்ளார்.மாநகராட்சி பகுதிகளில்...
வேலம்பாளையம்: மேல்நிலைப்பள்ளி; நேதாஜி பள்ளி; சிறுபூலுவபட்டி, ரங்கநாதபுரம் மற்றும் காவிலிபாளையம் பள்ளி.

அண்ணா நெசவாளர் காலனி: ஆத்துப்பாளையம், செட்டிபாளையம், அய்யன்காளிபாளையம், பெரியார் காலனி மற்றும் வெங்கமேடு பள்ளி. அண்ணாநகர் அங்கன்வாடி மையம். கோவில்வழி: கோவில் வழி பஸ் ஸ்டாண்ட், அமராவதிபாளையம், புதுப்பாளையம், விஜயாபுரம், பள்ளிகள். சிடிசி காலனி.
கே.வி.ஆர். நகர்: கே.வி.ஆர் நகர், கருவம்பாளையம், பாரப்பாளையம், தெற்கு ரோட்டரி, ஸ்ரீதேவி மற்றும் காமராஜ் பள்ளிகள். செல்லம் நகர் விநாயகர் கோவில்.
எல்ஆர்ஜிஆர் மையம்: சக்தி விநாயகர் மண்டபம், ராஜ மாதா நகர் விநாயகர் கோவில், கருணாகபுரி மண்டபம், சாரதா ராமசாமி பள்ளி. முத்து நகர் அங்கன்வாடி.
மேட்டுப்பாளையம்: குமரானந்தபுரம் பள்ளி, குமார் நகர் பள்ளி, டீச்சர்ஸ் காலனி அங்கன்வாடி மையம். நாவலர் நகர், ஜீவா நகர், வெங்கடேசபுரம் மாரியம்மன் கோவில், புது பஸ் ஸ்டாண்ட். நல்லுார்: சேரன் நகர், செம்மேடு, அல் அமீன், செரங்காடு பள்ளிகள். காயிதே மில்லத் பள்ளிவாசல், ஆர்.வி.இ. நகர் அங்கன்வாடி.
நெருப்பெரிச்சல்: சேடர்பாளையம் அங்கன்வாடி, பாண்டியன் நகர், சோழன் நகர், சமத்துவபுரம், பொம்மநாயக்கன்பாளையம், மும்மூர்த்தி நகர் பள்ளிகள்.
நெசவாளர் காலனி: டி.என்.கே.புரம், பாரதி நகர், எம்.எஸ்.நகர், வெங்கடாசலபுரம் பள்ளிகள். இ.எஸ்.ஐ., மருத்துவமனை, நீதியம்மாள் நகர், எஸ்.வி. காலனி மசூதி.
பெரியாண்டிபாளையம்: சுபாஷ் பள்ளி, இடுவம்பாளையம், நாச்சம்மாள் காலனி, தனலட்சுமி நகர் அங்கன்வாடி மையங்கள். பாரக்காடு, அண்ணா நகர்.
சூசையாபுரம்: கே.பி.என். காலனி, சவுடாம்பிகா மண்டபம், ராயபுரம், ரயில்வே ஸ்டேஷன்; சூசையாபுரம், முத்துசாமி வீதி அங்கன்வாடிமையம்.
மண்ணரை: காஞ்சி நகர், போயர் காலனி, மண்ணரை, கருமாரம்பாளையம் பள்ளிகள். பழைய பஸ் ஸ்டாண்ட்: பழைய பஸ் ஸ்டாண்ட், பெரிய தோட்டம்; செல்லப்பபுரம்,பழைய நகர்,அரண்மனைப்புதுார், காங்கயம்பாளையம் புதுார் பள்ளிகள்.
டி.எஸ்.கே.,: வி.பி. சிந்தன் நகர், ஈடன் கார்டன், சந்திரகாவி, இ.பி. காலனி பள்ளிகள். எம்.என்.எஸ். நகர் விநாயகர் கோவில், நாகத்தம்மன் கோவில்,மாஸ்கோ நகர், கொங்கணகிரி.
வீரபாண்டி: கிருஷ்ணா நகர், கல்லாங்காடு அங்கன்வாடிமையம். தெற்கு தோட்டம் விநாயகர் கோவில், பூங்கா நகர் மாரியம்மன் கோவில்; அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனை.
குருவாயூரப்பன் நகர்: சக்தி நகர், போயம்பாளையம், மண்ணரை பள்ளி. பிச்சம்பாளையம், ஸ்ரீநகர், ராதாநகர் அங்கன்வாடி மையம்.
சுண்டமேடு: தென்னம்பாளையம், ஜவஹர் நகர், குப்பாண்டாம்பாளையம், பட்டுக்கோட்டையார் நகர், கே.எம்.ஜி. நகர், ஏ.பி., நகர்.

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில், இன்று இரண்டாம் கட்ட தடுப்பூசி சிறப்பு முகாம், நடக்கிறது. முகாமில், 76 ஆயிரத்து, 821 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை