தனி விமானத்தில் நியூசி., வீரர்கள் | செப்டம்பர் 18, 2021

தினமலர்  தினமலர்
தனி விமானத்தில் நியூசி., வீரர்கள் | செப்டம்பர் 18, 2021

ராவல்பிண்டி: பாகிஸ்தான் சென்ற நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள், ஐந்து ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருந்தது. ராவல்பிண்டியில் முதல் போட்டி துவங்க சில மணி நேரம் இருந்த நிலையில், பாதுகாப்பு அச்சம் காரணமாக தொடரை ரத்து செய்தது நியூசிலாந்து அணி. 

பாகிஸ்தான் தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது. இருப்பினும் முடிவில் உறுதியாக இருந்தது நியூசிலாந்து. நேற்று ராவல்பிண்டியில் இருந்து இஸ்லாமாபாத் விமான நிலையம் சென்றனர். முதலில் குண்டு துளைக்காத பஸ்சில் பயிற்சியாளர்கள் செல்ல, அடுத்த பஸ்சில் வீரர்கள் சென்றனர். 

இதுகுறித்து ஒருவர் கூறுகையில்,‘‘வீரர்கள் சென்ற பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ராணுவம், போலீசார் விமான நிலையம் வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். எமிரேட்சில் இருந்து தனி விமானம் வந்து நியூசிலாந்து அணியினரை அழைத்துச் செல்லும்,’’ என்றார். 

மூலக்கதை