மகனுக்கு இரண்டாவது பிறந்தநாள் வாழ்த்து கூறும் எமி ஜாக்சன்

தினமலர்  தினமலர்
மகனுக்கு இரண்டாவது பிறந்தநாள் வாழ்த்து கூறும் எமி ஜாக்சன்

'மதராசப்பட்டிணம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, 'ஐ, தங்கமகன், 2.0' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் இங்கிலாந்து நடிகை எமி ஜாக்சன். திடீரென சினிமாவில் நடிப்பதிலிருந்து விலகி இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆண் குழந்தைக்குத் தாயானார். அவருடைய காதலரான ஜார்ஜ் பனயிட்டோவ் என்பவருடன் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் மட்டுமே நடந்தது, ஆனால், திருமணம் நடக்கவில்லை.

கர்ப்பமாக இருந்த போதும் கூட பல விதமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். மகன் பிறந்த பிறகும் அடிக்கடி அவரது புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தார். கடந்த இரண்டு வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்காமல் தான் இருக்கிறார் எமி. ஆனால், அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றிப் பகிர்ந்து வருகிறார்.

நேற்று இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடிய தனது மகனுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், “என்னுடைய அழகான பையனுக்கு இன்று இரண்டாவது பிறந்தநாள். நீ நம்ப முடியாத அளவிற்கு சிறப்பு வாய்ந்தவர். உன்னுடைய அம்மாவாக நான் இருப்பதற்கு எவ்வளவு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். மகிழ்ச்சிக்கும், சூரிய ஒளியின் சிறிய கதிர் போன்ற உனக்கு மகிழ்ச்சியான இரண்டாது பிறந்தநாள் வழ்த்துகள். நம்ப முடியாத அளவிற்கு சிறிய மனிதனாக நீ வளர்ந்து கொண்டிருக்கிறாய்,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை