பெட்டில் படுத்தபடி விருதுடன் ஹாயாக போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே

தினமலர்  தினமலர்
பெட்டில் படுத்தபடி விருதுடன் ஹாயாக போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே

விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டேவுக்கு தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் நடித்த அலவைகுந்தபுரம் என்ற படம் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்திற்கு பிறகுதான் அவர் அதிகப்படியான படங்களில் கமிட்டாகி வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த படத்திற்கு 5 சாக்ஸி விருதுகள் கிடைத்துள்ளது.

இப்படத்திற்காக அல்லு அர்ஜூன் சிறந்த நடிகராகவும், பூஜா ஹெக்டே சிறந்த நடிகையாகவும், இயக்குனர் திரிவிக்ரம் சிறந்த இயக்குனர், தமன் சிறந்த இசையமைப்பாளர், ராதாகிருஷ்ணன் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதுகளை பெற்றுள்ளனர்.

இந்த விருது விழாவில் மஞ்சள் நிற உடையணிந்து தேவதையாட்டம் கலந்து கொண்டுள்ளார் பூஜா ஹெக்டே. அதையடுத்து தனது வீட்டிற்கு வந்து விருதுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பூஜா ஹெக்டே, அதிகாலை 4 மணிக்கே எழுந்து உழைத்தால் கண்டிப்பாக ஒருநாள் விருது கிடைக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை