"பொன்னியின் செல்வன்" படப்பிடிப்பு நிறைவு - அடுத்தாண்டு கோடையில் முதல்பாகம் ரிலீஸ்

தினமலர்  தினமலர்
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நிறைவு  அடுத்தாண்டு கோடையில் முதல்பாகம் ரிலீஸ்

கல்கி எழுதிய சரித்திர நாவல் பொன்னியின் செல்வன். எம்ஜிஆர்., கமல்ஹாசன் தொடங்கி பல ஜாம்பவான்கள் இதை படமாக எடுக்க நினைத்து கைவிட்டனர். இயக்குனர் மணிரத்னம் இதை படமாக்க போவதாக இரு ஆண்டுகளுக்கு முன் அறிவித்தார். கொரோனா உள்ளிட்ட பல பிரச்னைகளை தாண்டி நடந்து வந்த இதன் படப்பிடிப்பு இப்போது நிறைவடைந்துவிட்டது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், ரகுமான், விக்ரம் பிரபு, அஸ்வின், லால், நாசர் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். இரண்டு பாகங்களாக தயாராகும் இந்த படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்ச்செலவில் சுமார் ரூ.800 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

இதன் படபிடிப்பு இந்தியா முழுக்க பல இடங்களில் நடந்தது. கடந்த பல மாதங்களாக ஐதராபாத், மத்திய பிரதேசத்தில் நடந்தது. இறுதியாக பொள்ளாச்சியில் நடந்த படப்பிடிப்பு இப்போது நிறைவடைந்துள்ளது. அடுத்தப்படியாக படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் துவங்க உள்ளன. பொன்னியின் செல்வன் முதல்பாகம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் ரிலீஸாகிறது. இதற்கான அறிவிப்பை புதிய போஸ்டர் ஒன்று மூலம் வெளியிட்டுள்ளனர். கூடவே புதிய போஸ்டரில் பொன்னியின் செல்வன் தலைப்பு தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.

மூலக்கதை