கொரோனா குமார்-ஆக மாறிய சிம்பு

தினமலர்  தினமலர்
கொரோனா குமார்ஆக மாறிய சிம்பு

மாநாடு படத்தை முடித்துவிட்ட சிம்பு தற்போது பத்து தல, வெந்து தணிந்தது காடு படங்களில் நடிக்கிறார். இவற்றில் வெந்து தணிந்தது காடு படத்தை கவுதம் மேனன் இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி வேலன் தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த நிறுவனத்தின் மற்றுமொரு படத்திலும் சிம்பு நடிக்கிறார். சிம்புவின் 48வது படமாக உருவாகும் இப்படத்திற்கு கொரோனா குமார் என பெயரிட்டுள்ளனர். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். இப்படத்திற்கான தலைப்பு பற்றிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் வரும் குமுதா, குமார் கதாபாத்திரத்தை தொடர்புபடுத்தி இந்த தலைப்பை அறிவித்துள்ளனர். அதனால் இப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தபடம் இருக்குமோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

#CoronaKumar

மூலக்கதை