கடன் பெற முடியாமல் தவிக்கும் வணிகங்கள்

தினமலர்  தினமலர்
கடன் பெற முடியாமல் தவிக்கும் வணிகங்கள்

புதுடில்லி:கொரோனா பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கான கடன் திட்டங்களை அரசு கொண்டுவந்த போதிலும், 83 சதவீதத்துக்கும் மேற்பட்ட சிறு வணிகங்களால் பாதிப்பிலிருந்து மீள முடியவில்லை என்பது ஆய்வு ஒன்றின் வாயிலாக தெரியவந்துள்ளது.

‘டிரேடு இந்தியா’ எனும் நிறுவனம், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களிடம் எடுத்த ஆய்வில் இவ்வாறு தெரியவந்துள்ளது. மேலும், கிட்டத்தட்ட 63 சதவீத வணிகங்களுக்கு தொழில்நுட்பம் குறித்த போதுமான புரிதல்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை