திறன் பயிற்சியாளர்கள் லட்சக்கணக்கில் தேவை

தினமலர்  தினமலர்
திறன் பயிற்சியாளர்கள் லட்சக்கணக்கில் தேவை

புதுடில்லி:அடுத்த சில ஆண்டுகளில், கிட்டத்தட்ட 50 கோடி பேர் திறன் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும், அதற்கு லட்சக்கணக்கான பயிற்சியாளர்கள் தேவைப்படுவார்கள் என்றும், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை செயலாளர் ரவி மிட்டல் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது: அடுத்த சில ஆண்டுகளில், நமது நாட்டில், கிட்டத்தட்ட 50 கோடி பேர் திறன்மிக்கவர்களாக மாற வேண்டும். நம் நாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், திறன் மிக்கவர்களாக நாம் மாற வேண்டியது மிகவும் அவசியம். அதற்கேற்ப பயிற்சியாளர்களும் அதிகம் தேவை.நமக்கு படைவீரர்களைப் போல, லட்சக்கணக்கில் பயிற்சியாளர்கள் தேவைப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி, கண்டிப்பாக பிராந்திய மொழியில் இருக்க வேண்டும். பயிற்சியாளர்கள் தாய்மொழியில் விவரிக்கும்போது தான், மாணாக்கர்களின் திறன் மேம்படும். எதிர்கால தேவையை அறிந்து, அதற்கேற்ப திறனை அனைவரும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.அரசு கல்விக்கு அளிக்கும் அதே அளவிலான முக்கியத்துவத்தை, திறன் மேம்பாட்டுக்கும் வழங்க முயற்சித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை