மீண்டும் கதை நாயகனாக பசுபதி

தினமலர்  தினமலர்
மீண்டும் கதை நாயகனாக பசுபதி

சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த பசுபதி. கமல்ஹாசனுடன் விருமாண்டி படத்தில் நடித்த பிறகு பாப்புலர் ஆனார். அதன்பிறகு பெரிய ஹீரோக்களின் படத்தில் வில்லனாகவும், குணசித்ர வேடங்களிலும் நடித்தார். வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட ஒருசில படங்களில் கதையின் நாயகனாக நடித்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ராம் சங்கய்யா என்ற புதுமுகம் இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ரோகினி, அம்மு அபிராமி, உள்பட பலர் நடிக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனியில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது.

மூலக்கதை