நார்வே சர்வதேச ஓபன் சதுரங்க போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்து தமிழக வீரர்கள் சாதனை!: குவியும் பாராட்டுக்கள்

தினகரன்  தினகரன்
நார்வே சர்வதேச ஓபன் சதுரங்க போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்து தமிழக வீரர்கள் சாதனை!: குவியும் பாராட்டுக்கள்

நார்வே: நார்வேயில் நடைபெற்ற சர்வதேச ஓபன் சதுரங்க மாஸ்டர்ஸ் செம்பியன்ஷிப் போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்து தமிழக வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். ஸ்ட்ரோவாங்கர் நகரத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதி போட்டியில் 15 வயதான தமிழக வீரர் டி.குகேஷ், நார்வே நாட்டின் பிரட்ரிக் காசெனுடன் மோதினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய குகேஷ், 8வது சுற்றில் பிரட்ரிக் காசெனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். மொத்தம் உள்ள 10 புள்ளிகளில் 8.5 புள்ளிகள் சேர்த்து குகேஷ் வெற்றியை தன்வசமாக்கினார். சாம்பியன் பட்டம் வெற்ற தமிழக வீரர் குகேஷுக்கு இந்திய மதிப்பில் 5 லட்சம் ரூபாய் ரொக்க பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. 2வது இடத்துக்கான போட்டியில், ஜெர்மனி வீரர் விட்டலிக் குனின் உடன் மற்றொரு தமிழக வீரர் இனியன் மோதினார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7.5 புள்ளிகள் பெற்று இனியன் 2வது இடத்தை கைப்பற்றினார். 8வது சுற்றில் அவர் ஜெர்மனி வீரரை வீழ்த்தி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். இனியனுக்கு இந்திய மதிப்பீட்டில் 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கப்பட்டன. சதுரங்க போட்டியில் சாதித்த தமிழக வீரர்கள் குகேஷ் மற்றும் இனியனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

மூலக்கதை