வாழ்த்து மழையில் அஷ்வின் | செப்டம்பர் 17, 2021

தினமலர்  தினமலர்
வாழ்த்து மழையில் அஷ்வின் | செப்டம்பர் 17, 2021

புதுடில்லி: தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு, சகவீரர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின். தமிழகத்தை சேர்ந்த ‘சுழல்’ வீரரான இவர், இதுவரை 79 டெஸ்ட் (413 விக்கெட்), 111 ஒருநாள் (150 விக்கெட்), 46 சர்வதேச ‘டுவென்டி–20’ (52 விக்கெட்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஐ.பி.எல்., அரங்கில் சென்னை, புனே, பஞ்சாப் அணிகளுக்காக விளையாடிய இவர், தற்போது டில்லி அணியில் இடம் பெற்றுள்ளார்.

 

எமிரேட்சில் நடக்கவுள்ள 14வது ஐ.பி.எல்., சீசனுக்கான மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க துபாயில் உள்ள அஷ்வின், நேற்று தனது 35வது பிறந்த நாள் கொண்டாடினார். இவருக்கு, கேப்டன் கோஹ்லி, இஷாந்த் சர்மா, ஹனுமா விஹாரி உள்ளிட்ட சகவீரர்கள் சமூக வலைதளத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தவிர, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), டில்லி அணி சார்பிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஷாந்த் சர்மா, தனது ‘டுவிட்டரில்’ அஷ்வினுடன் துபாயில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதில், ‘‘இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அஷ்வின். இந்த நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையட்டும். அது, ஆண்டு முழுவதும் தொடரட்டும்’’, என, தெரிவித்திருந்தார்.

மூலக்கதை