காலநிலை மாற்றம்: மீத்தேன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த ஜோ பைடன் வலியுறுத்தல்

தினமலர்  தினமலர்
காலநிலை மாற்றம்: மீத்தேன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த ஜோ பைடன் வலியுறுத்தல்

வாஷிங்டன்: 'காலநிலை மாற்றத்துக்கு எதிரான போரில் மீத்தேன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் கவனம் கொள்ள வேண்டும்' என, உலக நாடுகளின் தலைவர்களிடம் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.



பூமியின் வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இது தொடர்ந்தால் 2040ல் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் மிகப்பெரிய பேரழிவு ஏற்படும். மனித இனம் மட்டுமின்றி பிற உயிரினங்களும் வாழ முடியாத சூழல் உருவாகும். காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படும்' என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தற்போது, மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்து வருகின்றன.


இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளதாவது: காலநிலை மாற்றத்துக்கு எதிரான போரில் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் உலகத் தலைவர்கள் கவனம் கொள்ள வேண்டும். உலகளாவிய மீத்தேன் உமிழ்வை 2030க்குள் 30 சதவீதம் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்துள்ள ஒப்பந்தத்தில் பிற நாடுகள் சேருவதை வலியுறுத்துகிறோம். இம்மாதிரியான நடவடிக்கைகள் உலக வெப்பமயமாக்கலை உடனடியாகக் குறைத்துவிடாது. ஆனால், பொது சுகாதாரம் மற்றும் விவசாய உற்பத்தியை மேம்படுத்தும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாஷிங்டன்: 'காலநிலை மாற்றத்துக்கு எதிரான போரில் மீத்தேன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் கவனம் கொள்ள வேண்டும்' என, உலக நாடுகளின் தலைவர்களிடம் ஜோ பைடன்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை