52 நிறுவனங்கள் விண்ணப்பம்

தினமலர்  தினமலர்
52 நிறுவனங்கள் விண்ணப்பம்

புதுடில்லி:ஏர் கண்டிஷனர்கள் மற்றும் எல்.இ.டி., விளக்குகளுக்கான உதிரிபாகங்களை தயாரிப்பதற்காக 6,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய, 52 நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

வீட்டு உபயோகப் பொருட்கள் துறையில், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கச் சலுகை வழங்கும் பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ், இந்நிறுவனங்கள் முதலீடு செய்ய விண்ணப்பித்துள்ளன. இதை அடுத்து இரண்டு – மூன்று ஆண்டுகளில் உள்நாட்டிலேயே உற்பத்தி துவங்கிவிடும். தற்போது இந்த உதிரிபாகங்கள், சீனா மற்றும் தைவானிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

மூலக்கதை