இலங்கையில் அக்., 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தினமலர்  தினமலர்
இலங்கையில் அக்., 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு

கொழும்பு: இலங்கையில் கோவிட் பரவலைத் கட்டுப்படுத்த ஊரடங்குக் கட்டுப்பாடுகள் வரும் அக்., 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளன.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தலைமையில் கோவிட் தடுப்புக் குழுக் கூட்டம் இன்று (செப்., 17) நடைபெற்றது. கூட்டத்தில், கோவிட் பரவலைத் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்துள்ள ஊரடங்குக் கட்டுப்பாடுகள் வரும் அக்., 1ம் தேதி வரை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெலா கூறுகையில், 'இலங்கையில் நேற்றைய (செப்., 16) நிலவரப்படி புதிதாக 2,300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 4,98,694 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 11,187 பேர் பலியாகி உள்ளனர்.

இலங்கையில் தினசரி கோவிட் பாதிப்பு 2,000த்தைக் கடந்து வருவதால், மேற்கொண்டு தொற்று பரவாமல் இருக்க, பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. பாதிப்பு குறைந்ததும் கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும்' என, நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொழும்பு: இலங்கையில் கோவிட் பரவலைத் கட்டுப்படுத்த ஊரடங்குக் கட்டுப்பாடுகள் வரும் அக்., 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளன.nsimg2846914nsimgஇலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தலைமையில் கோவிட்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை