தோனி ‘அட்வைஸ்’ | செப்டம்பர் 17, 2021

தினமலர்  தினமலர்
தோனி ‘அட்வைஸ்’ | செப்டம்பர் 17, 2021

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி 40. இந்தியாவுக்கு இரண்டு உலக கோப்பை (2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் 50 ஓவர்) பெற்றுத்தந்தவர். ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்கு கேப்டனாக உள்ளார். 

எமிரேட்சில் நடக்கவுள்ள 14வது ஐ.பி.எல்., சீசனுக்காக துபாய் சென்றுள்ள தோனி, கொரோனா 3வது அலைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘தடுப்பூசி, மாஸ்க் அணியவும்’ என்ற தனியார்  நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதுகுறித்து தோனி கூறுகையில், ‘‘நம் பாதுகாப்பு நம் கையில் தான் உள்ளது. கண்டிப்பாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு, தவறாமல் மாஸ்க் அணிய வேண்டும்,’’ என்றார்.

மூலக்கதை