மீண்டு வருவேன்: டிம் பெய்ன் | செப்டம்பர் 17, 2021

தினமலர்  தினமலர்
மீண்டு வருவேன்: டிம் பெய்ன் | செப்டம்பர் 17, 2021

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் 36. இவரது கழுத்தில் உள்ள ‘டிஸ்க்’ பகுதியில் ஏற்பட்ட  வீக்கம் காரணமாக, இடது கையை துாக்க முடியாமல் அவதிப்பட்டார். கடந்த சில வாரங்களாக பயிற்சியில் ஈடுபடவில்லை.

பலரது ஆலோசனைக்குப் பின் மெல்போர்ன் மருத்துவமனையில் கழுத்தில் ஆப்பரேஷன் செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில்,‘‘எனது தொண்டையில் பெரிய துளையிட்டு, குரல்வளைப் பகுதியை நகர்த்தி ஆப்பரேஷன் செய்தனர். வேறு வழியில்லை என்பதால் இப்படிச் செய்தனர். இன்னும் முழுமையாக குணமடையவில்லை. டிச. 8ல் துவங்கவுள்ள ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் தயாராகிவிடுவேன்,’’ என்றார்.

மூலக்கதை