டி.20 கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி விலகல் ஏன்?... பரபரப்பு தகவல்கள்

தினகரன்  தினகரன்
டி.20 கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லி விலகல் ஏன்?... பரபரப்பு தகவல்கள்

மும்பை: இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோஹ்லி அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டி.20 உலக கோப்பையுடன் ஒன்டே மற்றும் டி.20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோஹ்லி விலகுவார் என செய்திகள் பரவியது. ஆனால் அணி சிறப்பாக செயல்படும் வரை கேப்டன் மாற்றம் என்ற கேள்வியே எழவிலை என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்தார். இந்நிலையில் உலக கோப்பை டி.20 தொடருடன் டி.20 கேப்டன் பதவியில் இருந்துவிலகுவதாக விராட் கோஹ்லி அறிவித்துள்ளார். ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன்சி பொறுப்பில் கவனம் செலுத்துவதற்காக டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நீண்ட ஆலோசனைக்குபின் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில், இதுவரை 90 போட்டிகளில் விளையாடியுள்ள கோஹ்லி 3149 ரன் எடுத்துள்ளார். இதில் கேப்டனாக 45 போட்டிகளில் ஆடி 27 போட்டிகளில் வெற்றியை பெற்று தந்துள்ளார். 14 போட்டிகளில் தோல்வியையும், 4 போட்டிகள் முடிவு எட்டப்படாமலும் முடிந்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக கோஹ்லியின் வெற்றி சதவிகிதம் 65.11. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். டி20 கேப்டன் பொறுப்பில் இருந்தபோது அதிவேகமாக 1000 ரன் எடுத்த ஒரே வீரர் கோஹ்லி தான். 30 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டினார். அண்மை காலமாக கோஹ்லி ரன் எடுக்கமுடியாமல் தடுமாறி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கடைசியாக ஆடிய 54 இன்னிங்சில் அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இதனால் பேட்டிங்கில் கவனம் செலுத்தும் வகையிலும், பணிச்சுமையினை குறைக்கும் வகையிலும் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஐசிசி தொடர்களில் கோஹ்லி தலைமையில் இந்திய அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை. இதனால் டி.20 உலக கோப்பையில்ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதுவும் கோஹ்லி பதவி விலக ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.கோஹ்லி விலகலால் உலக கோப்பைக்கு பின் டி.20 அணியின் கேப்டனராக ரோகித்சர்மா நியமிக்கப்பட உள்ளார். மேலும் 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு பின்னர் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் கோஹ்லி விலகுவார் என கூறப்படுகிறது. இதனிடையே டி.20 உலக கோப்பை இந்தியாவுக்கு பெற்றுத்தந்து கோஹ்லி வெற்றியுடன் கேப்டன் பதவியில் இருந்துவிடைபெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.கோஹ்லி இனி சுதந்திரமாக ஆடலாம்இந்திய அணியின்முன்னாள் பேட்ஸ்மேன் வினோத்காம்பளி அளித்துள்ளபேட்டி: உலகக் கோப்பைக்குப் பிறகு டி 20யில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் பொறுப்பேற்பார் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் அவர் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியை பல முறை வெற்றி பெற வழிநடத்தி உள்ளார். இனி கோஹ்லி தனது முழு திறமையுடன் விளையாடுவார், ஏனெனில் அவருக்கு எந்த அழுத்தமும் இருக்காது. விராட் சுதந்திரமாக விளையாட வேண்டும், என்றார்.கே.எல்.ராகுலை நியமிக்க கவாஸ்கர் ஆலோசனைஇந்தியா ஒரு புதிய கேப்டனை உருவாக்க விரும்பினால், கே.எல். ராகுலைப் பார்க்கலாம். அவர் நன்றாக செயல்பட்டு வருகிறார். இப்போது கூட இங்கிலாந்தில், அவரது பேட்டிங் மிகவும் நன்றாக இருந்தது. ஐபிஎல் மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டிலும் சர்வதேச அரங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரை துணை கேப்டனாக நியமித்து பின்னர் கேப்டனாக்கலாம். அவர் ஐபிஎல்லில் பஞ்சாப் கேப்டனாக மிகவும் ஈர்க்கக்கூடிய தலைமைத்துவ குணங்களைக் காட்டியுள்ளார். கேப்டன்சியின் சுமை அவரது பேட்டிங்கை பாதிக்க விடவில்லை, என தெரிவித்துள்ளார்.டி 20. கேப்டனாக கோஹ்லி இதுவரை..போட்டி: 45வெற்றி: 27தோல்வி: 14கைவிடப்பட்டது: 2டை: 2ஐபிஎல் கேப்டனாக...போட்டி: 132வெற்றி: 60தோல்வி: 65கைவிடப்பட்டது: 4

மூலக்கதை