பெரியாரின் பிறந்தநாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம்: கேரள முதல்வர் தமிழில் ட்வீட்

தினகரன்  தினகரன்
பெரியாரின் பிறந்தநாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம்: கேரள முதல்வர் தமிழில் ட்வீட்

திருவனந்தபுரம்: பெரியாரின் பிறந்தநாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம் என கேரள முதல்வர் தமிழில் ட்வீட் செய்துள்ளார். பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செப்டம்பர் 17, 1879-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். இவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். இந்நிலையில் இன்று தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேரள முதல்வர் பிரனாய் விஜயன் தமிழில் ட்வீட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்; பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம். சமூக நீதி,சாதி ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள் அதிகமாக தேவைப்படும் இக்காலகட்டத்தில் அவர் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை