பாதுகாப்பு கருதி பாக்., எதிரான கிரிக்கெட் தொடரை கடைசி நேரத்தில் ரத்து செய்த நியூசி.,

தினமலர்  தினமலர்
பாதுகாப்பு கருதி பாக்., எதிரான கிரிக்கெட் தொடரை கடைசி நேரத்தில் ரத்து செய்த நியூசி.,

ராவல்பிண்டி: பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டித் தொடரை பாதுகாப்பு காரணங்களால் கடைசி நேரத்தில் ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டுவென்டி-20 போட்டிகளை விளையாடத் திட்டமிட்டிருந்தது. முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் இன்று (செப்.,17) நடைபெற இருந்தது. ஆனால், போட்டி துவங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு வரவில்லை, ரசிகர்களும் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அசாதாரணமான சூழல் நிலவியது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், தன் வீரர்களை அறையிலேயே இருக்குமாறும் களத்தில் இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியது.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. மேலும், நியூசிலாந்து அணி வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டது.

ராவல்பிண்டி: பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டித் தொடரை பாதுகாப்பு காரணங்களால் கடைசி நேரத்தில் ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.நியூசிலாந்து

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை