கணவருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ஸ்ரேயா

தினமலர்  தினமலர்
கணவருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ஸ்ரேயா

கொரோனா முதல் அலை முடிந்து அனைவரும் சற்று ரிலாக்ஸ் ஆவதற்கு முன்பே தொடர்ந்து இரண்டாவது அலையும் ஆதிக்கம் செலுத்தியதால் மக்களின் வாழ்க்கை முறையே மாறி போனதோடு, வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழலும் ஏற்பட்டது. திரையுலக பிரபலங்களும் படப்பிடிப்பு, பார்ட்டிகள், சுற்றுலா என எங்கும் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். தற்போது கொரோனா இரண்டாவது அலை முடிந்து ஓரளவு இயல்பு நிலை திரும்பியுள்ளது.

இதையடுத்து கொரோனா இரண்டாவது அலையின் போது பார்சிலோனா நகரத்தில் மாட்டிக்கொண்ட நடிகை ஸ்ரேயா மற்றும் அவரது கணவர் இருவரும் தற்போது இந்தியா திரும்பியுள்ளனர். வந்தவுடனே நண்பர்களுடன் பார்ட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்ந்த ஸ்ரேயா அதை தொடர்ந்து திருப்பதி கோவிலுக்கு தனது கணவர் மற்றும் குடும்பத்தாருடன் சென்று ஏழுமலையானை தரிசித்துள்ளார். ஸ்ரேயாவுடன் அவரது ரஷ்ய கணவரும் இந்து பாரம்பரிய முறைப்படி உடையணிந்து கோவிலில் தரிசனம் செய்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

மூலக்கதை