ரஜினியுடன் மோதலை தவிர்த்த அஜித்

தினமலர்  தினமலர்
ரஜினியுடன் மோதலை தவிர்த்த அஜித்

அஜித்குமார் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். வலிமை திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதே நேரம் ரஜினியின் அண்ணாத்த திரைப்படமும் நவம்பர் 4ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாத்த படம் வெளியிடும் நேரத்தில் வலிமை படத்தை வெளியிட்டால் வசூல் ரீதியாக பாதிப்பு வரலாம் என படக்குழு கருதுவதால் வலிமை படத்தின் ரிலீசை தள்ளி வைக்கலாம் என்று படக்குழு முடிவு செய்திருக்கிறது என்கிறார்கள். அதேநேரம் படத்தை டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் ஒட்டி வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை