பயத்தால் தடுமாற்றம் : மெக்கலம் | செப்டம்பர் 14, 2021

தினமலர்  தினமலர்
பயத்தால் தடுமாற்றம் : மெக்கலம் | செப்டம்பர் 14, 2021

துபாய்: ‘‘ஐ.பி.எல்., முதல் சுற்றில் பயம் காரணமாக தடுமாற்றத்தை சந்தித்தோம்,’’ என கோல்கட்டா அணி  பயிற்சியாளர் மெக்கலம் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் நடந்த ஐ.பி.எல்., தொடரின் பாதியில் கோல்கட்டா அணி பவுலர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியருக்கு கொரோனா உறுதியாக ஐ.பி.எல்., ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது கோல்கட்டா அணி 2ல் மட்டுமே வென்று ஏழாவது இடத்தில் இருந்தது.  துபாயில் தனது முதல் ஆட்டத்தில் செப். 20ல் பெங்களூருவுடன் மோத உள்ளது. 

இதுகுறித்து அந்த அணி பயிற்சியாளர் மெக்கலம் (நியூசி.,) கூறும்போது, ‘‘அடுத்த 4 – 5 வாரங்கள் வீரர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் சவாலாக ஏற்று சிறப்பாக விளையாட முயற்சிக்க வேண்டும். இந்தியாவில் 2021 ஏப்., – மே மாதம் ஐ.பி.எல்., போட்டி நடந்த போது கொரோனா தீவிரமாக இருந்தது. இதனால் ஒருவித பயம் காரணமாக கோல்கட்டா அணி தடுமாற்றத்தை சந்தித்தது. இரண்டாவது பாதியில் இயான் மோர்கன் தலைமையிலான எங்கள் அணி சிறப்பாக செயல்படும். எங்களால் தொடரை சரியாக முடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த நிலைமையில் தான் அணி இருக்கிறது. இந்தியாவில் இருந்து வெளியேறிய போது (ஐ.பி.எல்., ரத்து) எங்கள் அணி எப்படி விளையாட வேண்டும் என்ற ஒரு பயிற்சியாளராக எனது விருப்பத்தை வீரர்கள் புரிந்து கொண்டனர் என நினைக்கிறேன்' என்றார். 

மூலக்கதை