தென் ஆப்ரிக்கா ‘ஹாட்ரிக்’ வெற்றி | செப்டம்பர் 14, 2021

தினமலர்  தினமலர்
தென் ஆப்ரிக்கா ‘ஹாட்ரிக்’ வெற்றி | செப்டம்பர் 14, 2021

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா, ‘டுவென்டி–20’ தொடரை 3–0 என்ற கணக்கில் வென்றது. 

இலங்கை சென்ற தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் வென்ற தென் ஆப்ரிக்கா 2–0 என தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் மோதிய மூன்றாவது, கடைசி போட்டி கொழும்புவில் நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த இலங்கை அணிக்கு குசல் பெரேரா (39) மட்டும் கைகொடுத்தார். மற்றவர்கள் ஏமாற்ற இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் பிஜோர்ன், ரபாடா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக், ஹென்ரிக்ஸ் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. இருவரும் அரைசதம் அடித்தனர். தென் ஆப்ரிக்க அணி 14.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 121 ரன் எடுத்து 10 விக்கெட்டில் வெற்றி பெற்றது. குயின்டன் (59), ஹென்ரிக்ஸ் (56) அவுட்டாகாமல் இருந்தனர். 

மூலக்கதை