சிறந்த ‘பீல்டர்’: ஐ.சி.சி., புதிய விருது | செப்டம்பர் 14, 2021

தினமலர்  தினமலர்
சிறந்த ‘பீல்டர்’: ஐ.சி.சி., புதிய விருது | செப்டம்பர் 14, 2021

துபாய்: ஐ.சி.சி., சார்பில் புதியதாக சிறந்த ‘பீல்டர்’ விருது தரப்பட்டது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அயர்லாந்தில் பெண்களுக்கான உள்ளூர் ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. பிரெடி, சிவில் சர்வீஸ் அணிகள் மோதிய போட்டியில், வீராங்கனை ஒருவர் எறிந்த பந்தை பெற்ற விக்கெட் கீப்பர் ரன் அவுட் செய்ய முயற்சித்து, ‘ஸ்டம்சை’ தகர்க்க எறிந்தார். அப்போது திடீரென உள்ளே புகுந்த நாய் ஒன்று, வேகமாக ஓடி அந்த பந்தை வாயில் கவ்விக் கொண்டு சென்றது. 

மற்ற வீராங்கனைகள் துரத்திய போதும் அங்கும் இங்கும் என போக்கு காட்டிக் கொண்டு பந்தை தர மறுத்தது. அப்போது எதிர் முனையில் இருந்த பிஷ்சர் தரையில் உட்கார, நாய் அவரிடம் தஞ்சம் புகுந்து, பந்தை கொடுத்தது. இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், தனது ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் வீடியோவை வெளியிட்டது.

அதில்,‘‘மைதானத்தில் நன்றாக ஓடியது நாய். இதனால் இம்மாதம் சிறந்த வீரர் விருது கூடுதலாக ஒருவருக்கு தரப்படுகிறது. இம்மாதத்தின் சிறந்த நாய், சிறந்த பீல்டர் இது தான்,’ என தெரிவித்துள்ளது. 

மூலக்கதை