நாங்க இப்போ வேற ‘லெவல்’ * ஸ்மிருதி மந்தனா மகிழ்ச்சி | செப்டம்பர் 14, 2021

தினமலர்  தினமலர்
நாங்க இப்போ வேற ‘லெவல்’ * ஸ்மிருதி மந்தனா மகிழ்ச்சி | செப்டம்பர் 14, 2021

பிரிஸ்பேன்: ‘‘உலக ‘டுவென்டி–20’ தொடர் பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற பிறகு, இந்திய பெண்கள் அணி நிறைய முன்னேற்றம் கண்டுள்ளது,’’ என ஸ்மிருதி மந்தனா தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி செப். 21 முதல் மூன்று ஒருநாள், ஒரு பகலிரவு டெஸ்ட் (செப். 30–3, கான்பரா), மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக ஆஸ்திரேலியா சென்ற நமது அணி வீராங்கனைகள் 14 நாள் தனிமைப்படுத்தல் முடிந்து, பயிற்சிகளை துவக்கினர். இதுகுறித்து துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா கூறியது:

உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடர் பைனலில் இந்திய பெண்கள் அணி, ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இதன் பிறகு, நிறைய முன்னேற்றம் கண்டுள்ளது. இத்தொடருக்குப் பின் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக பெரிய இடைவெளி விழுந்து விட்டது. இது, தங்கள் போட்டி குறித்து நன்கு தெரிந்து கொள்ள உதவியது. 

தற்போது வலிமையான முறையில் மீண்டு வந்துள்ளனர். ஒட்டுமொத்த அணியும் தங்களது ‘பிட்னஸ்’, திறமையில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர். கடந்த ஐந்து, ஆறு மாதங்களாக தொடர்ந்து விளையாடி வருகிறோம். தற்போது போட்டியில் விளையாடும் மனநிலைக்கு வந்துள்ளோம். 

வரும் ஆஸ்திரேலிய தொடர் இந்திய அணிக்கு சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். மற்றபடி உலகின் சிறந்த அணிகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. அதிக சவால் தரும் இந்த அணிக்கு எதிராக விளையாட பிடிக்கும். 

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை