ஆப்கன் துணை பிரதமர் முல்லா பராதர் கொலை?

தினமலர்  தினமலர்
ஆப்கன் துணை பிரதமர் முல்லா பராதர் கொலை?

காபூல்:தலிபான் அமைப்புக்குள் ஏற்பட்ட சண்டையில், துணைப் பிரதமர் முல்லா பராதர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட தகவலை, தலிபான் தலைவர்கள் மறுத்துஉள்ளனர்.

தலிபான் பயங்கரவாதிகளின் அரசியல் பிரிவு தலைவராக பதவி வகித்து வந்தவர் முல்லா அப்துல் கனி பராதர். இவர், தலிபான் அரசின் துணைப் பிரதமராக பொறுப்பேற்று உள்ளார்.

மோதல்

இவரது ஆதரவாளர்களுக்கும், ஹக்கானி பிரிவு தலைவர் சிராஜுதின் ஹக்கானியின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இவர்களுக்குள் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில், முல்லா பராதர் சுட்டுக் கொல்லப் பட்டதாக தகவல் வெளியானது. தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின் அடிக்கடி ஊடகத்தில் தென்பட்ட பராதர், சமீபமாக அதிகம் தென்படவில்லை.

இந்நிலையில், மத்திய கிழக்கு நாடான கத்தாரின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் சமீபத்தில் காபூல் வந்தார். அவரை அமைச்சரவை பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். அதில் கூட, துணை பிரதமர் முல்லா பராதர் பங்கேற்கவில்லை. இதையடுத்து, அவரது மரணம் குறித்த சந்தேகம் வலுவடைந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் சுலைல் ஷாஹீன் கூறிய தாவது:துணைப் பிரதமர் முல்லா பராதர் சண்டையில் கொல்லப்பட்டதாக கூறப்படும் தகவலை, குரல் வழி செய்தி வாயிலாக அவர் மறுத்துஉள்ளார்.

நிரூபிக்கப்படவில்லை

இந்த தகவல், அடிப்படை ஆதாரமற்றது. இதில் துளியும் உண்மையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.காந்தகாரில் நடைபெற்ற சில அரசியல் கூட்டங்களில் முல்லா பராதர் பங்கேற்ற, 'வீடியோ' காட்சி களை தலிபான்கள் வெளியிட்டுள்ளனர். ஆனால் அந்த வீடியோக்களின் உண்மைத்தன்மை இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

காபூல்:தலிபான் அமைப்புக்குள் ஏற்பட்ட சண்டையில், துணைப் பிரதமர் முல்லா பராதர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட தகவலை, தலிபான் தலைவர்கள் மறுத்துஉள்ளனர்.தலிபான் பயங்கரவாதிகளின்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை