தனிமையில் ரஷ்ய அதிபர் புடின்

தினகரன்  தினகரன்
தனிமையில் ரஷ்ய அதிபர் புடின்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தவர்களில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்த அவர் தன்னை சுயமாக தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக அதிபர் மாளிகை தலைமை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆரோக்கியமாக உள்ளார். அவர் ஸ்புரூட்னிக் தடுப்பூசி இரண்டு டோசும் செலுத்திக்கொண்டுள்ளார். ஆனால் அதிபர் புடினை சந்தித்தவர்களில் ஒருவருக்கு தொற்று பாதிப்பு இருந்ததாக தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து அவர் சுயமாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அவர் எத்தனை நாட்கள் தனிமையில் இருப்பார் என்று தெரியாது. ஆனால் அரசு அலுவலக பணிகளில் எப்போதும் போல ஈடுபடுவார் என்றார். இந்நிலையில், கொரோனா பரிசோதனையில் புடினுக்கு நெகடிவ் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை