விவசாயிகள் போராட்டத்தில் எடுத்த நடவடிக்கை என்ன? 4 மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

தினகரன்  தினகரன்
விவசாயிகள் போராட்டத்தில் எடுத்த நடவடிக்கை என்ன? 4 மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: வேளாண் சட்டத்திற்கு எதிராக போரட்டம் நடத்தி வரும் விவசாயிகள் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய ஒன்றிய மற்றும் டெல்லி, உ.பி, அரியானா, ராஜஸ்தான் மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் விவசாயிகள் போரட்டத்தால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையக் கூடாது என கடந்த இரு மாதங்களுக்கு முன்னதாக உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேற்று ‘‘அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளையும் மதிக்க வேண்டும். இந்த பிரச்னைகள் குறித்து தற்போது வரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஒன்றிய அரசு, டெல்லி, அரியானா, உத்திரப்பிரதேசம் ஆகிய அரசுகள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’’ என கூறி உள்ளது.

மூலக்கதை