லீ...மிதாலி முதலிடம் * ஐ.சி.சி., தரவரிசையில்... | செப்டம்பர் 14, 2021

தினமலர்  தினமலர்
லீ...மிதாலி முதலிடம் * ஐ.சி.சி., தரவரிசையில்... | செப்டம்பர் 14, 2021

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி ‘பேட்டிங்’ தரவரிசையில் முதலிடத்தை மிதாலி ராஜ், லிஜெல்லே லீ பகிர்ந்து கொண்டனர். 

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. ‘பேட்டிங்’ தரவரிசையில் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், 762 புள்ளிகளுடன் தொடர்ந்து ‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்கிறார்.

தவிர, விண்டீஸ் அணிக்கு எதிராக 91 ரன் விளாசிய தென் ஆப்ரிக்க துவக்க வீராங்கனை லிஜெல்லே லீ (762) மிதாலியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார். ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலே (756) மூன்றாவதாக உள்ளார். இந்திய அணி துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (701 புள்ளி), ஹர்மன்பிரீத் கவுர் (594) 9, 17வது இடத்தில் தொடர்கின்றனர். 

‘பவுலிங்’ தரவரிசையில் இந்தியாவின் ஜுலான் கோஸ்வாமி (5வது இடம், 694 புள்ளி), பூணம் யாதவ் (9வது, 617) ‘டாப்–10’ பட்டியலில் உள்ளனர். ‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா (331 புள்ளி) 5வது இடத்தில் நீடிக்கிறார். 

ஷபாலி ‘நம்பர்–1’

 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிக்கான ‘பேட்டிங்’ தரவரிசையில் இந்தியாவின் ஷபாலி வர்மா (759) முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனே (744), இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (716) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். 

பவுலிங் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா (6வது, 703), பூணம் யாதவ் (8வது, 670) இடத்தில் நீடிக்கின்றனர். 

மூலக்கதை