நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் சிறை தகர்ப்பு; 240 கைதிகள் தப்பியோட்டம்

தினமலர்  தினமலர்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் சிறை தகர்ப்பு; 240 கைதிகள் தப்பியோட்டம்

அபுஜா: நைஜீரியா சிறைச்சாலையின் தடுப்புச் சுவரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து தகர்த்து, அங்கிருந்த 240 கைதிகளை பயங்கரவாதிகள் தப்பவைத்துள்ளனர்.

நைஜீரியாவின் கோகி மாகாணத்தின் கெப்பா சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்., 12) இரவு அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சிறைச்சாலையின் தடுப்புச் சுவரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து தகர்த்து, 240 கைதிகளை தப்பவைத்து உள்ளனர். இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ராப் அரெக்பசுலோ கூறியதாவது: கெப்பா சிறைச்சாலையில் இருந்த 294 கைதிகளில், 224 பேர் விசாரணைக் கைதிகள்; 70 பேர் குற்றவாளிகள். இதில், 240 பேர் தப்பியுள்ளனர். தப்பி ஓடிய குற்றவாளிகளைப் பற்றிய தகவல்களை 'இண்டர்போல்' அமைப்பிடம் சமர்ப்பித்து உள்ளோம்.

ஒருவேளை நாட்டைவிட்டு அவர்கள் வெளியேறினாலும் பிடித்து விடுவோம். தாக்குதலில் ஈடுபட்டு பெரிய சேதாரத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். இரண்டு போலீசாரையும் கொன்ற பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல், நைஜீரியால் கடந்த ஏப்ரல் மாதம் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் இமொ மாகாணத்தில் இருக்கும் சிறையில் துப்பாக்கிச் சூடு நடத்தி, 1,800 கைதிகளை தப்ப வைத்தது குறிப்பிடத்தக்கது.

அபுஜா: நைஜீரியா சிறைச்சாலையின் தடுப்புச் சுவரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து தகர்த்து, அங்கிருந்த 240 கைதிகளை பயங்கரவாதிகள் தப்பவைத்துள்ளனர்.நைஜீரியாவின் கோகி மாகாணத்தின்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை