டிடி மீது செருப்பு வீச்சு

தினமலர்  தினமலர்
டிடி மீது செருப்பு வீச்சு

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் விஜய் டிவி திவ்யதர்ஷினி குறிப்பிடத்தக்கவர். அவர் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் அதை கலகலப்பாக்கி விடுவார். அந்த அளவுக்கு தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை ஜாலியாக கலாட்டாக்களுடன் அற்புதமாக வழங்கி வருகிறார் திவ்யதர்ஷினி.

சமீபகாலமாக தனது சோசியல் மீடியாவில் தான் மாலத்தீவுக்கு சென்றது உள்பட பல போட்டோ, வீடியோக்களை பதிவிட்டு வரும் டிடி, தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நடனமாடி குறும்புத்தனமான சேட்டை செய்கிறார் டிடி. அதைப்பார்த்த அவரது வீட்டில் உள்ளவர்கள் அவரை நோக்கி செருப்பை வீசுகின்றனர். இந்த வீடியோ வைரல் ஆனது.

மூலக்கதை