வேலைவாய்ப்புக்கான நம்பிக்கை அதிகரிக்க திட்டம்

தினமலர்  தினமலர்
வேலைவாய்ப்புக்கான நம்பிக்கை அதிகரிக்க திட்டம்

புதுடில்லி:நாட்டில் உள்ள நிறுவனங்களில், 44 சதவீத நிறுவனங்கள், அடுத்த மூன்று மாதங்களில் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.இதனால், அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான காலத்துக்கான வேலைவாய்ப்பு குறித்த நம்பிக்கை, கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இது குறித்து, 'மேன்பவர்' குழுமத்தின் ஆய்வறிக்கை: நாட்டிலுள்ள 3,046 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள், ஆண்டு இறுதிக்குள்ளாக ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.


கொரோனா சம்பந்தமான தடைகள் குறைந்து, உற்பத்தி மற்றும் சேவைகளில் தேவைகள் அதிகரிக்கும் என இந்நிறுவனங்கள் கருதுகின்றன. இதன் காரணமாக வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.உற்பத்தி, சேவைகள், நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்புக்கான நம்பிக்கை மிகுந்து காணப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை