ரம்யா பாண்டியனின் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்

தினமலர்  தினமலர்
ரம்யா பாண்டியனின் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கி உள்ள படம் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும். ரம்யா பாண்டியன், வாணி போஜன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஒரு கிராமத்தை பற்றி இந்தியா முழுக்க டிவியில் பேசுகிறார்கள். அந்த கிரமாத்திலோ மின்சாரமே கிடையாது. அப்படிப்பட்ட ஊரில் தான் ஆசையாய் வளர்த்த இரு காளைகள் காணாமல் போக அதை கண்டுபிடிக்கவும், கிராமத்தை மேம்படுத்தவும் நடக்கும் முயற்சிகளை தழுவி காமெடியாக இந்த படத்தை உருவாக்கி உள்ளனர். இசை - கிரீஷ், ஒளிப்பதிவு - சுகுமார். இந்த படத்தை பார்த்துவிட்டு சூர்யா, சிவக்குமார் உள்ளிட்டோர் ரம்யா பாண்டியனின் நடிப்பை வெகுவாக பாராட்டி உள்ளனர். கிராமத்து மக்களின் வாழ்வியலை அப்படியே நடித்திருக்கிறார் ரம்யா பாண்டியன். ஓடிடிக்கு என்று தயாராகி உள்ள இப்படம் இம்மாதம் வெளியாகிறது.

மூலக்கதை