‛லிப்ட்'டுக்கு வந்த சோதனை

தினமலர்  தினமலர்
‛லிப்ட்டுக்கு வந்த சோதனை

கவின் நடித்துள்ள, ‛லிப்ட்' படத்தை எக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழக வெளியீட்டு உரிமையை ரவீந்தர் சந்திரசேகரிடம் கடந்த ஏப்ரல் மாதம் கொடுத்து ஒப்பந்தம் போட்டது. திடீரென ஒப்பந்தத்தை முறித்து கொள்வதாகவும், ரவீந்தருக்கும் லிப்ட் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிக்கை வெளியிட்டனர். இதுகுறித்து ரவீந்தர் வெளியிட்ட அறிக்கையில், ‛ஒப்பந்தப்படி படத்தின் வெளியீட்டு உரிமை எங்களிடம் தான் உள்ளது. அக்டோபரில் படத்தை வெளியிட நினைத்து தயாரிப்பாளரை தொடர்பு கொண்டால் அவர் பேசவே இல்லை. இப்போது ஒப்பந்தம் முறிந்து விட்டதாக வேடிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார்' எனக் கூறியுள்ளார். இவ்விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்துக்குள்ளாகியுள்ளது.

மூலக்கதை