நடிகரை கடத்திய லைட்மேன்

தினமலர்  தினமலர்
நடிகரை கடத்திய லைட்மேன்

புதுமுகம் கார்த்திகேயன் வேலு நாயகனாக நடிக்க, கன்னடத்தை சேர்ந்த சஞ்சனா புர்லி நாயகியாக தமிழில் அறிமுகமாக உருவாகியுள்ள சூ மந்திரகாளி படத்தை ஈஸ்வர் கொற்றவை இயக்கியுள்ளார். இயக்குனர் சற்குணம் வெளியிடுகிறார்.

படம் குறித்து நடிகரும், இயக்குனரும் அளித்த பேட்டி: தலைப்பை வைத்து இது பேய் படம் என நினைக்க வேண்டாம். காமெடியான மாயாஜாலமான பேண்டஸி படம். படத்திற்காக இரண்டு மாதம் ஒத்திகை பார்த்தோம். தர்மபுரி சுற்றுவட்டாரத்தில் படப்பிடிப்பை நடத்தினோம். காட்டில் படப்பிடிப்பை நடத்திய போது யானை வந்து, ஒட்டு மொத்த படக்குழுவையும் ஓட வைத்தது. படத்தில் கிஷோர் தேவ் என்பவர் முக்கியமான பெண் வேடத்தில் நடித்துள்ளார். கிராம மக்கள் அனைவரும் அவரை நிஜ பெண்ணாகவே நினைத்தனர். லைட் மேன் ஒருவர் அவர் மீது ஆசைப்பட்டு கடத்தியே சென்று விட்டார். கடைசியில் லைட்மேனுக்கு புரியவைத்து, நடிகரை மீட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை