இங்கிலாந்து பிரதமரின் தாய் காலமானார்

தினகரன்  தினகரன்
இங்கிலாந்து பிரதமரின் தாய் காலமானார்

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் சார்லட் ஜான்சன் காலமானார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் சார்லட் ஜான்சன் வால் (79). தொழில் முறை பெயிண்டரான இவர், கடந்த சில வாரங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சார்லட் ஜான்சன் திடீரென உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் அறிக்கையில் உறுதி செய்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு நடந்த கட்சியின் வருடாந்திர மாநாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன், அவரது தாயாரை பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது. தற்போது, பிரதமரின் தாய் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மூலக்கதை