சீனாவில் தங்க முகமூடி

தினகரன்  தினகரன்
சீனாவில் தங்க முகமூடி

பீஜிங்: மூவாயிரம் வருடங்களுக்கு முந்தைய தங்க முகமூடி ஒன்று, சீனாவின் தென்மேற்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிச்சுவான் மாகாண கலாசார பாரம்பரிய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். சுமார் 37.2 சென்டிமீட்டர் அகலம், 16.5 செ.மீ உயரம் கொண்ட இந்த தங்க முகமூடி சிச்சுவான் மாகாணத்தின் குவாங்கனில் உள்ள சான்சிங்டி இடிபாடுகள் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் 100 கிராம் (0.22 பவுண்டுகள்) எடையுடையது. இந்த முகமூடியானது, கி.மு 1046 இல் முடிவுக்கு வந்த ஷாங் வம்சத்தின் பிற்பகுதியிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது. சமீபத்திய மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 500 பாரம்பரியப் பொருட்களில் இந்த கலைப்பொருளும் ஒன்றாகும் என்று சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை